கொரோனா வைரஸ் தொற்று கனடாவில் மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில், மாகாணத்தில் வரவிருக்கும் நடுவர் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இந்த நேரத்தில் எதிர்கால திட்டங்களுக்கான நடுவர் தேர்வை இடைநிறுத்தியுள்ளது.
வரவிருக்கும் விடயங்களுக்கான நடுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை வெள்ளிக்கிழமை தனது இணையதளத்தில் வெளியிடுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், நீதிமன்ற பயனர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் மூத்த தகவல் தொடர்பு ஆலோசகரும் பத்திரிகை செயலாளருமான ஜெனெசா க்ரோக்னாலி கூறினார்.
வரவிருக்கும் வழக்கு விசாரணைக்கு நடுவர்கள் கடமைக்கு சம்மன் பெற்ற எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடாது என்றும் க்ரோக்னாலி கூறினார்.