மருத்துவர் மேற்பார்வை இல்லாமல் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கு எதிராக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொவிட்-19 தொற்றினை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க சிலர் நேரடியாக குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் சுகாதார கனடா கவலை கொண்டுள்ளது’ என்று நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றினை தடுப்பது, சிகிச்சை அல்லது குணப்படுத்த எந்த மருந்துகளும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
மருந்துகள் பொதுவாக மலேரியா மற்றும் லூபஸ் போன்ற சில தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிக்கவே இதனை பரிந்துரைக்கின்றனர்.
இறப்பு மற்றும் விஷம் பற்றிய தகவல்களுக்குப் பின்னர் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதேபோன்ற எச்சரிக்கையை வெளியிட்ட பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.