கியூபெக் முழுவதும் விடுமுறை நாட்களில் பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனையின் போது, 844 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாகாணத்தில் உள்ள பொலிஸ் சேவைகளின் கணக்கெடுப்புக்களை தொகுத்து, ‘சரேட் டு கியூபெக்’ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிபர அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் பாதிப்புக்குள்ளான வாகன ஓட்டுனர்களைப் பிடிக்க நவம்பர் இறுதிக்கும் ஜனவரி தொடக்கத்திற்கும் இடையில் 3,500 சோதனைச் சாவடிகள் வைக்கப்பட்டுள்ளதாக ‘சரேட் டு கியூபெக்’ தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 844 பேரில், சுமார் நூறு பேர் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2018ஆம் ஆண்டு விடுமுறை காலத்தை விட குறைவு என கூறப்படுகின்றது. 2018ஆம் ஆண்டு 960 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.