கனடாவின் கியூபெக் மாகாண தேர்தலில் தற்போதைய முதல்வர் பிரான்கோயிஸ் லெகார்ட் இரண்டாவது அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பெரும்பான்மை பலத்துடன் லெகார்ட்டின் Coalition Avenir Québec (CAQ) கட்சி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாக வெற்றியின் பின்னர் அவர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
மாகாண மக்கள் தெளிவான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலிலும் லெகார்ட் வெற்றியீட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபெக் மாகாணத்தின் அனைத்து பிராந்தியங்களுக்கும் அனைத்து வயதினை உடையவர்களுக்கும் அனைத்து இன சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும் தாம் முதல்வராக கடமை ஆற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாகாண சபை தேர்தலில் லெகார்டின் கட்சி 74 ஆசனங்களை பெற்றுக் கொண்டது இம்முறை 92கக்கும் முற்பட்ட ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.