Reading Time: < 1 minute
கியூபெக்கில் உள்ளவர்கள் புதிய சட்டத்தின் கீழ் கஞ்சாவை சட்டப்பூர்வமாக வாங்க 21 வயது வரை காத்திருக்க வேண்டும் என கூட்டணி அவெனீர் கியூபெக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய சட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. இதுவே நாட்டில் மிக உயர்ந்த வயது எல்லை என கூறப்படுகின்றது.
கனடாவின் பிற இடங்களில், ஆல்பர்ட்டாவைத் தவிர, 19 வயதிற்கு அதிகமானவர்களே கஞ்சா வாங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறனர். ஆல்பர்ட்டாவில் சட்ட வயது 18 ஆகும்.
இதுகுறித்து மாகாணத்தின் இளைய சுகாதார அமைச்சர் லியோனல் கார்மண்ட் கூறுகையில், ‘உண்மையில் கஞ்சாவுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய எங்கள் இளைஞர்களைப் பாதுகாக்க விரும்புகிறோம்’ என கூறியுள்ளார்.