Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக்கில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

எரிபொருள் விநியோக நிறுவனமொன்றில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மொன்றியலிலிருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள St-Roch-de-l’Achigan பகுதியில் அமைந்துள்ள ப்ரோபேன் வாயு உற்பத்தி நிலையத்தில் இந்த வெடி விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

என்ன காரணத்தினால் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

உற்பத்தி நிலையத்தின் ட்ரக் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் காணாமல் போன பயணிகளின் எண்ணிக்கை மூன்று என தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான பனிப்பொழிவு நிலைமைகளினால் விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து 50 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.