Reading Time: < 1 minute

காலநிலை மாற்றப் பிரச்சினையைக் கையாள்வதற்கு கனடா எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான தமது இலக்கை அடைவதற்கு, தொடர்ச்சியாக மாறிவந்த அரசாங்கங்கள் தவறியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் காலநிலை மாற்றத்திற்கேற்ப செயற்பாடுகளை மாற்றிக்கொள்வதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை. இது மாற்றப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைவதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்தே குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.