Reading Time: < 1 minute
கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த புதிய சட்டமூலத்தில் கார்பன் வரி தொடர்பிலான யோசனைகள் உள்ளடக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நேரடியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளில் லிபரல் மற்றும் கான்சர்வேட்டிவ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளினதும் காலநிலை பாதுகாப்பு கொள்கைகள் ஏற்புடையவை அல்ல என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, உழைக்கும் மக்களை சுமைகளுக்குள் தள்ளாத திட்டங்களாக இருக்க வேண்டும் என ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஓர் திட்டத்தை வடிவமைத்து வருவதாகவும் அதன் அடிப்படையிலான சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜாக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.