மிகவும் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வந்த கார் திருட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளதாக, பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் 620,000 டொலர்கள் பெறுமதியிலான விலையுயர்ந்த கார்கள், மிசிசாகாவில் உள்ள சேமிப்பு கட்டடமொன்றில் கண்டறியப்பட்டதை அடுத்து, இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
முதல்கட்டமாக, மாணவர் விசாவில் தங்கியிருந்த சீனாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து, ஒண்டாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலிருந்து, 2.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியிலான வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
நேற்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 250,000 டொலர்கள் வரை பெறுமதியிலான கார்கள் அடங்கலாக, 28 விலையுயர்ந்த வாகனங்கள் மொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக, பீல் பிராந்திய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.