ஆல்பர்ட்டாவில் அக்டோபர் 8ம் திகதி முதல் காணாமல்போன கவுன்சிலர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்மணி மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
Suffield பகுதி கவுன்சிலராக பணியாற்றி வந்துள்ளார் 72 வயதான Alfred Belyea. இந்த நிலையில் அக்டோபர் 8ம் திகதி முதல் திடீரென்று அவர் காணாமல்போனதை அடுத்து, பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடினர்.
இந்த நிலையில் சனிக்கிழமை அன்று பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், காணாமல்போனதாக கூறப்பட்ட மாவட்ட கவுன்சிலர் Alfred Belyea-ன் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் குறித்த மாவட்ட கவுன்சிலரின் மனைவி 68 வயதான Deborah Belyea மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது பொலிஸ் காவலில் டெபோரா உள்ளார் என்றும் அக்டோபர் 18 அன்று ரெட் கிளிஃப் மாகாண நீதிமன்றத்தில் ஆஜராவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.