கடந்த வெள்ளிக்கிழமை நயாகரா ஆற்றில் வைத்து காணமல் போன 28 வயது ஆண் ஒருவர், ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நயாகரா ஆற்றின் Jarvis Street மறறும் Niagara Boulevard பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6:30 அளவில் மூவர் தத்தளிப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தபோது, அங்கே இருந்த வழிப்போக்கர் ஒருவர் ஆற்றிலிருந்து 29 வயதுப் பெண் ஒருவரை மீட்ட நிலையில், அந்தப் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் தத்தளித்த மூன்றாவது நபர் காணாமல் போயிருந்த நிலையில், காணாமல் போனவர் Fort Erie பகுதியைச் சேர்ந்த 28 வயதான Joshawa Raymond Douglas Brooks என அடையாளம் வெளியிடப்பட்டிருந்தது, அவர் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகல் 1:30 அளவில் சுழியோடிகள் நயாகரா ஆற்றில் Jarvis Street பகுதியில் வைத்து அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஒன்றில் தேடப்பட்டு வந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணும் உயிரிழந்துவிட்டதாக நேற்று பிற்பகல் வேளையில் தகவல் வெளியிட்ட காவல்துறையினர், குழந்தை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.