நடிகர் ராணா டகுபதி பாகுபலி படத்தில் மிக பிரம்மாண்ட உடல் தோற்றத்தில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய உடல் எடையை மொத்தமாக இழந்து ஒல்லியாக மாறிவிட்ட்டார்.
இந்த திடீர் மாற்றம் பற்றித்தான் அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ராணா இன்ஸ்டாகிராமில் ஒரு தண்ணீர் பிராண்டினை விளம்பரப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்தார். அதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். தண்ணீரை என்ன செய்து ஸ்மார்ட் ஆக்கினீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.
மேலும் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா? என ஒருவர் ஒப்பனாகவே கேட்டுள்ளார்.