Reading Time: < 1 minute
காசா போர் குறித்த ஆவணப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட கனடிய பிரஜை ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.
மன்சூர் சௌமான் என்ற பலஸ்தீன கனடியரே இவ்வாறு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சௌமான் ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது; காணாமல் போயிருந்தமை குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.
சௌமான், உயிருடன் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி தெரிவித்துள்ளார்.
தாம் உயிருடன் இருப்பதாகக் கூறி சௌமான் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
சௌமான் பற்றிய தகவல்களை அறிந்து கொண்ட குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.