Reading Time: < 1 minute
போர் இடம்பெற்று வரும் காசா பிராந்தியத்திலிருந்து வெளியேற காத்திருக்கும் கனடியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காசாவில் சிக்கியுள்ள கனேடியப் பிரஜைகளும் அவர்களது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறுவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
தங்களது பயண ஆவணங்கள் மற்றும் முக்கியமான பொருட்களை தம் வசம் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறுகிய அறிவிப்பின் அடிப்படையில் காசாவை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காசாவில் சுமார் 400 கனடியர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ராஃபா வாயிலாக கனேடியப் பிரஜைகள் எகிப்து நோக்கி செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.