வழக்கமான கறுப்பு கரடி வசந்த வேட்டையை, நடப்பு ஆண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகாணம் அறிவித்துள்ளது.
வருடாந்த மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இதற்கான தீர்மானம் எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜோன் யாகபுஸ்கி இந்த முன்மொழிவினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
கரடி வேட்டை 1999ஆம் ஆண்டில் மாகாணத்தால் இரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் 2014ஆம் ஆண்டில், மீண்டும் வசந்த கறுப்பு கரடி வேட்டை பருவம் அறிமுகமானது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பைலட் திட்டம் மே 1 முதல் ஜூன் 15 வரை டிம்மின்ஸ், தண்டர் பே, சட்பரி, சால்ட் ஸ்டீ ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில வனவிலங்கு மேலாண்மை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய நடப்பு ஆண்டும் வழக்கமான கறுப்பு கரடி வசந்த வேட்டையை, கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், கரடி குட்டிகளையும், குட்டிகளுடன் கூடிய பெண்களையும் வேட்டையாடுவது இன்னும் சட்டவிரோதமானது. இது 25,000 டொலர் வரை அபராதம் மற்றும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றமாகும்.
ஒன்ராறியோவில் 105000 கறுப்பு கரடிகள் இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிடப்பட்டுள்ளது.