கனடாவில் மக்கள் எந்த விடயங்களுக்காக அதிகளவில் கவலையடைகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, கனடாவில் பணப்பிரச்சினையால் மக்கள் அதிகளவில் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பணப் பிரச்சினை மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நித்திரையை பாதிப்பதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 வீதமான மக்கள் பணப் பிரச்சினையினால் தாங்கள் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.
சுகாதாரம், வேலை மற்றும் உறவுகள் போன்ற விடயங்களை விடவும் மக்கள் பணத்தினால் கூடுதல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கம், வட்டி வீத அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.