கனடாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜேகோப் ஹோகார்ட்டிற்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் றொரன்டோவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த இசைக்கலைஞர் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் உச்ச நீதிமன்ற நீதியரசர் கில்லியான் ரொபர்ட்ஸ் இன்று இந்த தண்டனையை அறிவித்தார்.
அரச தரப்பு சட்டத்தரணிகள் இசைக்கலைஞருக்கு ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்குமாறு கோரியிருந்தனர்.
ஹோகார்ட் எவ்வித குற்றப் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், குற்றச் செயலுக்கு ஏற்ற தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நீதியரசர் தெரிவித்துள்ளார்.
ரொபர்ட்ஸ் பத்தாண்டுகளுக்கு ஆயுதங்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த தண்டனை விதிப்பிற்கு எதிராக ஹோகார்ட் மேன்முறையீடு செய்துள்ளார்.