கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விடுமுறையை கழிக்கும் கரீபியன் தீவுகளின் ஜமெய்க்காவில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோஷ்டி மோதல் சம்பவங்கள் காரணமாக அந்த நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.
பதற்ற நிலை தொடர்ந்தும் நீடிக்கும் காரணத்தினால் அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கிங்ஸ்டன் உள்ளிட்ட ஆறு முக்கிய பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி முதல் பிரதமர் ட்ரூடோ குடும்பம் ஜமெய்க்காவில் விடுமுறையை கழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் பிரதமரின் குடும்பம் எங்கு தங்கியுள்ளது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
2.8 மில்லியன் மக்கள் சனத்தொகையைக் கொண்ட ஜமெய்க்காவில் இந்த ஆண்டில் கோஷ்டி மோதல்கள் காரணமாக 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜமெய்க்காவில் தங்கியிருக்கும் கனேடியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென கனேடிய அரசாங்கம் அந்நாட்டுப் பிரஜைகளுக்கு அதிகாரபூர்வமாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.