Reading Time: < 1 minute

கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பது குறைக்கப்படும் என குடி வரவு அமைச்சர் அறிவித்திருந்தார்.

குறித்த தீர்மானம் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் எடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உள்ளீர்ப்பு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் நிலவும் நெருக்கடி நிலை நாள் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் புதிய கொள்கை காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 35% வீழ்ச்சி அடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கனேடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் தெரிவிக்கையில்,

மாணவர்களின் எண்ணிக்கை வரையறையானது மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக்க தெரிவித்துள்ளார்.