Reading Time: < 1 minute

கனேடிய தேசிய கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் மிலான் போர்ஜானை ( Milan Borjan ) குரேஷிய கால்பந்தாட்ட ரசிகர்கள் இழிவுபடுத்தியிருந்தனர்.

குரேஷியின் அணியின் ஆதரவாளர்கள் போர்ஜானை மிக இழிவான வார்த்தைகளினால் தூற்றியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை (பீபா) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கோல் காப்பாளர் போர்ஜானை இழிவுபடுத்தியமைக்காக குரேஷிய கால்பந்தாட்ட ஒன்றியத்திற்கு, சர்வதேச கால்பந்தாட்ட பேரவை அபராதம் விதித்துள்ளது.

இந்த சம்பவத்திற்காக 50000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரக்குறைவான வார்த்தைகள், இழிவான செய்திகளை உள்ளடக்கிய பதாகைகள் என்பன விளையாட்டுப் போட்டிகளின் போது பொருத்தமானதல்ல என சர்வதேச கால்பந்தாட்டப்பேரவை தெரிவித்துள்ளது.

போர்ஜான் குரேஷியாவின் சேர்பிய எல்லைப் பகுதியில் பிறந்த ஓர் சேர்பியர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரேஷிய படையினர் சேர்பியாவை கைப்பற்றிய போது போர்ஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் புலம்பெயர்ந்திருந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி குரேஷியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கால்பந்தாட்டப்போட்டி நடைபெற்றது.

இதில் குரேஷிய அணி 4க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. கால்பந்தாட்ட ரசிகர்களின் தரக்குறைவான செயற்பாட்டுக்காக குரேஷிய கால்பந்தாட்ட பேரவைக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.