கனேடிய கால்பந்தாட்ட அணிக்கு எதிராக புதிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனித உரிமை அமைப்புக்களினால் கனேடிய கால்பந்தாட்ட அணிக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் கனேடிய அணி பங்கேற்க உள்ளது.
குறிப்பாக கனேடிய கால்பந்தாட்ட அணி, கட்டாரில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கால்பந்தட்ட பேரவைகளும் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டுப் பணியாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், மகளிர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியா கால்பந்தாட்ட அணி, கட்டார் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.