Reading Time: < 1 minute

கனேடிய எரிசக்தி துறையில் அங்கம் வகிக்கும் எட்டு நிறுவனங்கள் நேற்று (திங்கட்கிழமை) S&P/TSX கூட்டு அட்டவணையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

அவற்றின் சந்தை மூலதனம் குறைந்தபட்ச தேவைகளை விட குறைந்துவிட்டமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் எரிபொருள் மற்றும் எரிவாயு துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் சமீபத்திய அறிகுறியாகும்.

கனடாவின் முதன்மைக் குறியீட்டின் மறுசீரமைப்பு, புதிய எண்ணெய் குழாய் திறன் இன்மை மற்றும் மலிவான வட அமெரிக்க இயற்கை எரிவாயுவின் பற்றாக்குறை தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது.

இது பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் முதலீட்டை ஈர்ப்பதில் எரிசக்தி நிறுவனங்கள் பாரிய சவாலை எரிகொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கனடா உலகின் மூன்றாவது மிகப் பெரியளவிலான மசகு எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது, ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூலதன முதலீடு மற்றும் எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளமை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் :

Birchcliff Energy <BIR.TO>, Ensign Energy Services <ESI.TO>, Kelt Exploration Ltd <KEL.TO>, Nuvista Energy Ltd <NVA.TO>, NexGen Energy Ltd <NXE.TO>, Precision Drilling Corp <PD.TO>, Peyto Exploration and Development Corp <PEY.TO> and TORC Oil and Gas Ltd <TOG.TO>.

குறித்த நிறுவனங்கள் விலக்கப்படுவதால், குறியீட்டு – பின்தொடர் செயலற்ற நிதிகளின் (index-tracking passive funds) முதலீட்டை அவர்கள் இழப்பார்கள் என்று ரேமண்ட் ஜேம்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் ஜெரமி மெக்ரியா தெரிவித்துள்ளார்.