கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சரே நகரில் வீசிய பலத்த சூறாவளி காற்றில், வீதியில் முறிந்து விழுந்த மரத்தில் வாகனங்கள் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
184 ஆம் வீதிக்கு அருகிலுள்ள 10 ஆம் இலக்க நெடுஞ்சாலையில், மின்சாரக் கம்பிகளும் மரமும் முறிந்து வீழ்ந்ததாக சர்ரே பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், மரத்தினுள் சிக்கிய ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு வாகனத்தின் சாரதி சிறிய காயங்களுடன் தப்பியதுடன், அவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படவில்லை.
மரத்தை அகற்றி வீதியை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்றதால், அந்த வீதியூடான போக்குவரத்து இரவு முழுவதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.