Reading Time: < 1 minute

கனடாவின் வருமான முகவர் நிறுவனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கு கனடியர்களுக்கு கூடுதல் சேவையை வழங்கும் நோக்கில் கூடுதல் நேரம் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது.

கனடிய வருமான முகவர் நிறுவனத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள விரும்புவார்களின் நலன் கருதி இவ்வாறு சேவை நேரத்தை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

வரி செலுத்துபவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த சேவை நேர நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமையான பணி நேரத்தை விடவும் கூடுதல் அளவு நேரம் சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக நேர வலய மாற்றங்களினால் சில வாடிக்கையாளர்களினால் வருமான முகவர் நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியாது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருவர் ஒரு நகரில் இருந்து மற்றுமொரு நகருக்கு குடிபெயரும் போது அந்த புதிய நேர வலயத்தின் ஊடாக வருமான முகவர் நிறுவனத்தை தொடர்பு கொள்வதில் இடர்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது.

இந்த அசெளகரியத்தை தடுக்கும் நோக்கில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை ஏழு முப்பது மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நேர மாற்றத்தின் ஊடாக கனடாவின் அனைத்து பிராந்தியங்களில் வாழும் வாடிக்கையாளர்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட முடியும் என வருமான முகவர் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.