Reading Time: < 1 minute

கனடிய மக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருளுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல், லிபரல் அரசாங்கத்தின் வரிக் கொள்கை குறித்து பொலியேவ் கேள்வி எழுப்பி வருகின்றார்.

மத்திய அரசாங்கத்தின் எரிபொருள் கட்டணங்கள் தொடர்பில் அவர் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசாங்கத்தினால் அறவீடு செய்யப்படும் கார்பன் வரியை ரத்து செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

குறிப்பாக பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கனடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் விடுமுறையை கழிப்பதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கோடைக் காலத்தில் எரிபொருளுக்கு வரிச் சலுகை அரசாங்கம் வழங்க வேண்டுமென பொலியேவ் வலியுறுத்தியுள்ளார்.