Reading Time: < 1 minute
கனடாவின் சந்தைகளில் இருந்து மிக அவசரமாக உணவுப்பொருளொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.
ராணா பண்டக்குறியைக் கொண்ட கொண்ட வெள்ளை கோழி மற்றும் காளான் சோர்ஸ் பெஸ்டா வகை இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பொருளில் லிஸ்ட்டீரியா தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த உணவுப் பொருட்கள் சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப்பொருளுடன் பரிமாறக்கூடிய ஓர் பஸ்டா வகை உணவு என்பது குறிப்பிடத்தக்கது.