கனடிய கலைஞர்களது வாழ்வாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு காரணமாக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தங்களது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான சட்டங்களை அறிமுகம் செய்து தமது தொழிற்துறையை பாதுகாத்துக் கொடுக்குமாறு லிபரல் அரசாங்கத்திடம் கலைஞர்கள் கோரியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடான காணொளிகளினால் கலைஞர்களது பிரபல்யத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொழுதுபோக்கு கைத்தொழிற்துறையில் நன்மதிப்பு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டில் எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டம் நடத்தியிருந்தனர்.