Reading Time: < 1 minute
கனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு e-visa வசதிகளை இந்திய அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
Ottawaவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டது.
செவ்வாக்கிழமை (20) முதல் இணையதளத்தின் ஊடான இந்த சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்அறிவித்துள்ளது.
சுற்றுலா, வணிகம், மருத்து நோக்கங்களுக்காக இந்தியாவிற்கு பயணிக்க விரும்பும் கனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர் e-visa விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை COVID தொற்று காரணமாக கனடா உட்பட பல நாடுகளில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.