Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த சில வாரங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த மூக்கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக பதிவு செய்த 30 நிமிட நேர காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கனேடிய தொடர் கொலைச் சந்தேகநபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளதாக பொலிசார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.

மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கனேடிய பொலிசாரால் தேடப்பட்டு வந்த Kam McLeod (19) மற்றும் Bryer Schmegelsky (18) ஆகிய இருவரும் நெல்சன் நதிக்கருகே கடந்த வாரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.

உடற்கூற்று பரிசோதனையில், அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

இந்தநிலையில், உயிரிழந்த சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்த போது, அதில், அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால், அந்த காணொளியின் ஒரு சிறு பகுதி மட்டும் கொலைச் சந்தேகநபர்களின் குடும்பத்திற்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

அந்த காணொளி எவ்வளவு நேரம் ஓடக்கூடியது என்பதை பொலிஸார் தெரிவிக்காத நிலையில், கொலையாளிகள் உரையாடும் 30 நிமிட நேர காட்சி மாத்திரம் அவர்களது பெற்றோருக்கு காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.