Reading Time: < 1 minute
கனடாவில் அதிக பிரபல்யமான இரண்டு செயலிகளுக்கு அசராங்கம் தடை விதித்துள்ளது.
மத்திய அரசாங்க சாதனங்களில் இரண்டு செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீசெட் மற்றும் கெஸ்பர்ஸ்கை ஆசிய செயலிகளே இவ்வாறு கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ள்ளது.
சீன நிறுவனமொன்றின் வீசெட் செயலியைக் கொண்டு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும். ரஸ்ய நிறுவனமொன்றின் செயலியான கெஸ்பர்ஸ்கை செயலியானது சைபர் பாதுகாப்பினை உறுதி செய்கின்றது.
இந்த இரண்டு செயலிகளும் அரசாங்க சாதனங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த செயலியை பயன்படுத்தக் கூடாது என அறிவக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இவ்வாறு குறித்த செயலிகளுக்கு தடை மத்திய அரசாங்கம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.