Reading Time: < 1 minute
கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவின் புருன்பே (Burnaby) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு உயிர் காப்பு முயற்சிகள் மீட்கப்பட்ட போதும் அது வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய ஏனைய வாகன சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.