எதிர்வரும 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் (ஐஏடிஏ) கோரிக்கை விடுத்துள்ளது.
கனடா ஏற்கனவே உலகின் மிகக் கடுமையான கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுள்ளது என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர் விளைவுச் சோதனைக் கொள்கையை பேரழிவுகரமான முறையில் செயற்படுத்துவதன் மூலம் தவறான திசையில் செல்ல எங்களால் முடியாது என்று பன்னாட்டு விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
கனடா புதிய பயண விதிகளை டிசம்பர் 30ஆம் திகதி அறிவித்தது. இதன்படிக் கனேடிய குடிமக்கள் உட்பட அனைத்து பன்னாட்டுப் பயணிகளும் பறப்பதற்கு 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட எதிர்மறை பி.சி.ஆர் கொவிட்-19 சோதனைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டது.
பன்னாட்டுப் பயணிகள் தாங்கள் எந்த மாகாணத்தில் இறங்கினாலும் அவர்கள் இன்னும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பெரும்பாலான உள்வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு எதிர்மறை கொவிட்-19 சோதனைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.