கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 207 பேர் சட்ட விரோத போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளார்கள். இன்னமும் பலர் பலியாகி வருகிறார்கள்.
நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில் இத்தனை அதிகம் பேர் போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதால் பலியானது ஜனவரியில் தான் என்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நாளொன்றிற்கு ஆறு பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள்.
மேலும், முந்தைய மாதங்களைப் பார்க்கும்போது, பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த நவம்பரில் 210 பேரும், டிசம்பரில் 215 பேரும் போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளார்கள்.
2021இல் மட்டும்,சட்ட விரோத போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2,224.
உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் என வெளியிடப்பட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.