Reading Time: < 1 minute

கனடாவில் பெண் பாதசாரியொருவர் விபத்தில் சிக்கிய போது அவரை மீட்க சென்ற மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பெண் பாதசாரி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரம்டனின் ஹெரிடேஜ் மற்றும் ஸ்டீலஸ் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 41 வயதானவர் எனவும், 30 வயதான பெண் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

41 வயதான பெண் வாகனமொன்றில் மோதுண்டு வீதியின் அடுத்த பக்கத்தில் வீசி எறியப்பட்டுள்ளார், மற்றைய திசையிலிருந்து வந்த வாகனமும் குறித்த பெண்ணை மோதிச் சென்றுள்ளது.

அதன் பின்னர் படுகாயமடைந்த பெண்ணை மற்றுமொரு வாகனமும் மோதிச் சென்றுள்ளது.

இந்தப் பெண்ணை பாதுகாப்பதற்காக சென்ற பெண் மீதும் வாகனம் மோதுண்டுள்ளது. சம்பவம்தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.