Reading Time: < 1 minute
இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்காக கனடா – பிரம்ரனில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என பிரம்டன் நகர சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏனமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரம்ரன் நகரசபையின் 3, 4ம் வட்டார உறுப்பினர் மார்ட்டின் மடிரோஸ் (Martin Medeiros) இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாக பிரம்ரனில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படவேண்டும் என்ற தீா்மானத்தை நேற்று சபையில் முன்வைத்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இந்தத் தீர்மானத்துக்கான காரணங்களுள் ஒன்று என்று என நகரசபை உறுப்பினர் மார்ட்டின் மடிரோஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.