Reading Time: < 1 minute
கனடாவின் எல்லை பகுதி ஒன்றில் சுமார் 1500 கிலோ கிராம் கொக்குய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இடத்தில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அட்லாண்டிக் பிராந்திய பகுதியில் இவ்வாறு ஆயுதங்களும் போதை பொருளும் இந்த ஆண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் 270 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சுமார் 500 கிலோகிராம் எடையுடைய கஞ்சாப் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் களவாடப்பட்ட 132 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கனடிய எல்லைப் பகுதிகளில் பெரும் எண்ணிககையிலான பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.