கனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் நிலவரங்களின் அடிப்படையில் அரசியல் தரப்பில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விஞ்ஞானியான ஸ்ட்ஃபன் ரொம்லிம் (Stephen-Tomblin) விமர்சனம் வௌியிட்டுள்ளார்.
நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லெப்ரடோர் பிராந்திய பெறுபேறுகள் பெரிதும் ஆச்சரியமளிக்கவில்லை, சிதறிய அரசியல் கட்சிகளின் நிறங்கள் கனடாவின் பயணத்தில் குடிமக்களிடையேயான ஒற்றுமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கனடா நேற்று இருந்ததை விட இன்று பிளவுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 157 ஆசனங்களை பெற்றுள்ளது, அதேவேளை கொன்சவேட்டிவ் கட்சி மத்திய கனடா மற்றும் தெற்கு ஒன்ராறியோவில் நீலநிறம் உட்பட 121 ஆசனங்களை பெற்றது.
பிளாக் கியூபாகோயிஸ் அடுத்த இடத்தில் 32 இடங்களைப் பிடித்தது. அதே நேரத்தில், ஹெக் ஹாரிஸின் மீள்வருகையுடன் செயின்ட் ஜோன்ஸ் கிழக்கை மீட்டெடுப்பது உட்பட என்.டி.பி 24 இடங்களைப் பிடித்தது.
கனேடிய மக்கள் விரக்தியடைந்துள்ளதுடன், மிகவும் கோபத்துடன் உள்ளார்கள். பிரதான கட்சிகள் குடிமக்கள் மீது கவனம் செலுத்தவில்லை, அவர்கள் பொதுக் கொள்கையில் கவனம் செலுத்தவில்லை.
அத்துடன், அவர்கள் இந்த பூமியை பற்றி கவலை கொள்ளவில்லை. அவர்கள் அடிப்படையில் தங்கள் பிராந்திய நண்பர்கள் மற்றும் அவர்களின் சமூகங்களுக்காக மாத்திரம் செயலாற்றுகிறார்கள் என்று அரசியல் விஞ்ஞானி ஸ்ட்ஃபன் ரொம்லிம் கடுமையாக சாடியுள்ளார்.