Reading Time: < 1 minute

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் சுமார் 30000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீ காரணமாக இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இவ்வாறு பெருமளவிலான மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது.

உலங்கு வானூர்திகளின் உதவியுடனும், தீயணைப்புப் படையினரின் உதவியுடனும் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தின் வடக்கு பகுதியில் தொடர்ந்தும் கட்டுத்தீ பரவுகை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் மொத்தமாக 108 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் 31 இடங்களில் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.