இந்தியா கனடா தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டாலும், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் இந்தியர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.
கனேடியர் ஒருவர் கனடா மண்ணில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக செப்டம்பரில் கனேடிய பிரதமர் குற்றம் சாட்ட, இரு நாடுகளின் தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆனால், அதே செப்டம்பரில், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு, அதிகமாக இருந்ததாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தரவுகள் தெரிவித்துள்ளன.
பல்வேறு வழிகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 8,076 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 3,059 பேர், அல்லது 38% பேர், கனடா அமெரிக்க எல்லையில் கைது செய்யப்பட்டவர்கள்.
விடயம் என்னவென்றால், இதுவரை இப்படி அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையிலேயே, இதுதான் மிக அதிகமாகும்.
கனடாவில் குடியமர்ந்துள்ள பல இந்திய புலம்பெயர்வோர், குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய காத்திருந்திருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 2,327 சட்டவிரோத புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் கடத்தப்படும் முயற்சியின்போது பிடிபட்டுள்ளார்கள்.
செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 3,059ஆக உயர்ந்துள்ளது. அப்படி சிக்கியவர்களில், பெற்றோர் இல்லாமல் தனியாக வந்த பிள்ளைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.