Reading Time: < 1 minute
கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக கூடுதல் ஆய்வுகள் மற்றும் மேற்பார்வைக்கான உறுதிமொழிகளைப் பெற்ற பின்னர், கனடாவுக்கு விவசாயத் தொழிலாளர்களை அனுப்புவதை மீண்டும் தொடங்குவதாக மெக்ஸிகோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் சமீபத்திய வாரங்களில் குறைந்தது இரண்டு மெக்சிகன் ஆண்கள் இறந்துவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொவிட்-19 உடன் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை தற்காலிகமாக மெக்ஸிகோ தொழிலாளர்கள் கனடாவுக்குச் செல்வதை நிறுத்துவதோடு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ள விவசாயத் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாத இறுதியில் மெக்ஸிகோவிலிருந்து அழைத்துவந்த 207 பருவகால தொழிலாளர்களில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.