Reading Time: < 1 minute

கனடாவில் இந்த நிதியாண்டக்கான பாதீட்டுப் பற்றாக்குறை தொகை 39.2 பில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் நேற்றைய தினம் பாதீட்டுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்து.

நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சமர்ப்பித்திருந்தார்.

அதிகளவு வருமானம் ஈட்டுவோரிடம் கூடுதல் வரி அறவீடு செய்யும் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

நாட்டின் வீடமைப்புத் திட்டங்களையும் சமூக நலன்புரித் திட்டங்களையும் முன்னெடுப்பதற்காக இவ்வாறு கூடுதல் வரி அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை செலுமையாக்கும் திட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.