கனடாவில் பெற்றோலின் விலைகள் இரண்டு டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென் ஒன்றாரியோவில் எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருட்களின் குறிப்பாக பெற்றோலின் விலை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் முறையே 166.9 சதங்களாகவும், 176.9 சதங்களாகவும் உயர்வடைந்திருந்தது.
கடந்த ஜுன் மாதம் 28ம் திகதி பெற்றோல் விலை உயர்வடைந்து காணப்பட்டதனை கடந்த இரண்டு நாட்களிலேயே கூடுதல் விலை பதிவாகியுள்ளது.
இந்த விலை ஏற்றம் வெகு விரைவில் ஒரு லீற்றருக்கு இரண்டு டொலர்கள் என்ற தொகையை அடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவில் எரிபொருளுக்கான வரியை தற்காலிக அடிப்படையில் மாகாண அரசாங்கம் நீக்கியிருந்தது.
எனினும், இந்த வரி விதிப்பானது எதிர்வரும் ஜனவரி மாதம் மீளவும் அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் கனடாவில் எரிபொருளுக்கான விலைகள் மேலும் உயர்வடையும் சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.