கனடாவில் வீட்டு விலைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் வீட்டு விலைகள் சராசரியாக 12 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
வீடுகளின் விலைகள் சராசரியாக இரண்டு லட்சம் டொலர்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் வீட்டு விலைகள் கடந்த நவம்பர் மாதத்திலும் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ரியல் எஸ்டேட் ஒன்றியம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 630,000 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கனடாவின் அநேகமான பிரதான நகரங்களில் வீடுகளின் விலைகள் 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு நவம்பரில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
எனினும், கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் 50000 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 33000 வீடுகளே விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.