Reading Time: < 1 minute

கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் தொடர்பில் சுவாரஸ்யமான புதிய புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்களின் பிள்ளைகளே அதிகளவில் வீட்டு உரிமையாளராவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

பெற்றோர், வீட்டு உரிமையாளர்களாக காணப்பட்டால் அவர்களது பிள்ளைகள் வீட்டு உரிமையாளராகும் சாத்தியம் இரண்டு மடங்காக காணப்படுவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாகவே கனடாவில் இள வயதினை உடையவர்கள் அதிகளவு வீடுகளை கொள்வனவு செய்யதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வாடகை குடியிருப்பாளர்களின் பிள்ளைகளுக்கு வீடுகளை கொள்வனவு செய்யக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.