Reading Time: < 1 minute

கனடாவின் ஓர் பகுதியிலிருந்து அநாதரவான நிலையில் இருந்த 135 பூனைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக அளவில் பூனைகள் ஒரே இடத்தில் இருந்த காரணத்தினால் அவற்றில் பல பூனைகளுக்கு நோய்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சுவாச பை தொடர்பான தொற்றுக்கள் ஏற்பட்டதாக ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு குழுக்களாக பிரித்து இந்த பூனைகள் டொரன்டோவுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக Toronto Cat Rescue என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட பூனைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பராமரிக்கப்பட உள்ளதாகவும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பூனைகளின் உரிமையாளர்கள் அதிகளவான பூனைகளை பராமரிக்க முடியவில்லை என்பதனை இறுதி நேரத்தில் கூறுவதனால் முன்ஏற்பாடுகளை செய்யவோ திட்டமிடல்களை மேற்கொள்ளவோ முடிவதில்லை என றொரன்டோ பூனை மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

எதனால் இவ்வளவு பூனைகள் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டன என்பது பற்றியோ உரிமையாளர் பற்றிய விபரங்களோ வெளியிடப்படவில்லை.