Reading Time: < 1 minute

கனடாவில் வீடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Canada Mortgage and Housing Corp என்ற நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பொருளியலாளர் அலிடெக் லொர்வித், வீடுகளுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் கனடாவில் சுமார் 3.5 மில்லியன் வீடுகளில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கங்களினால் முன்னெடுத்து வரும் வீடமைப்பு திட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டாலும் இவ்வாறு பெருந்தொகை வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 3.5 மில்லியன் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.