கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிகளவான வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வழமையான மளிகைப் பொருள் கடைகளை விடவும் விலைக் கழிவு அறிவிக்கப்படும் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் செல்வதாகத் தெரிவிக்கப்படகின்றது.
விலைக் கழிவு அல்லது மலிவு விற்பனை நிலையங்கள் மீதான மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் முன்னணி நிறுவனங்கள் பல விலைக் கழிவு வியாபாரத்தினை தனியான பிரிவாக முன்னெடுத்து வருவதாகவும் அதற்காக அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வழமையான விற்பனையை விடவும் மலிவு விற்பனை ஊடாக அதிகளவு வருமானம் ஈட்டப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.