கனடாவில் வாடிக்கையாளர்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த தசைப்பிடிப்பு மற்றும் அக்குபஞ்சர் நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சான்றிதழ் பெற்ற தசை பிடிப்பாளர் எனவும் அக்குபஞ்சர் நிபுணர் எனவும் குறித்த பெண் போலியாக தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த பெண் வாடிக்கையாளர்களிடம் சுமார் 37000 டாலர்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹால்டன் பிராந்திய போலீசார் இந்த பெண் தொடர்பிலான விசாரணைகளை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட தசைப்பிடிப்பு நிபுணர் என தன்னை அடையாளப்படுத்தி குறித்த பெண் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கியுள்ளார்.
அனுமதி பத்திரம் இன்றி குறித்த பெண் பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சைகளை அளித்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
49 வயதான மாவிச் அகமத் என்ற பெண்ணே இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மோசடியான முறையில் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதாக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.