Reading Time: < 1 minute

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் மட்டும் வாடகைத் தொகைகள் 22 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

ரென்டல்ஸ்.சீஏ (Rentals.ca) என்ற வீட்டு மனை தொடர்பான இணைய தளம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இரண்டு தடவைகள் வாடகை தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை மாகாண வாடகை அதிகரிப்பு வழிகாட்டல்களை விடவும் அதிக தொகையில் உயர்த்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் அளவில் பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்படக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை 1472 டொலர்களாக காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த தொகை 1761 டொலர்களாக மாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடு ஒன்று காலியாகும் போது பொது கட்டுப்பாட்டுக்கு அமையவன்றி தாங்கள் விரும்பிய தொகையில் வீட்டு வாடகை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் அநேகமான வீட்டு உரிமையாளர்கள் வீடுகள் காலியாகும் போது வாடகை தொகையை வெகுவாக உயர்த்திக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.