கனடாவில் வாடகை தொகை சுமார் 2000 டாலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு சராசரி வாடகைத் தொகை 12 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது
Rentals.ca என்ற இணைய தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள தேசிய வாடகை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ரோபர் மாதத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
வாடகைத் தொகை ஒக்ரோபர் மாதத்தில் 209 டாலர்களினால் உயர்வடைந்துள்ளது.
கனடாவின் அநேக பகுதியில் தொடர்ச்சியாக வாடகைத் தொகை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட்டி வீதங்கள் உயர்வு மற்றும் சனத்தொகை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் இவ்வாறு வீட்டு வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.
வான்கூவாரில் ஒரு படுக்கையறைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி மாத வாடகை 2576 டாலர்கள் எனவும், இரண்டு படுகை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி மாத வாடகை 3521 டாலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வான்கூவாரிலேயே அதிகளவு வாடகைத் தொகை அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரிசையில் றொரன்டோ இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.